நான் சி.ஏ.டி.சி (என்.சி.சி) பத்து நாள் முகாமிற்கு போனேன். முதல் நாள் மாலையில் ஒரு பேகெட் பிஸ்கட் தந்தாங்க,சேரி பரவால கவனிப்பு கொஞ்சோ நல்லாத இருக்குதுன்னு நினைச்சே சாப்பாடு போட்டாங்க அதுக்கப்பறம் எல்லோரு ரூம்ல போய் படுதாங்க நானு போய் படுத்த . காலையில் படுபாவி சினிஎர்ஸ் அஞ்சு மணி ஆயிடுச்சு என்திரிங்கபா என்று சொன்னாக. நாங்கலு போய் பல்ல வேலகிட்டு,குளிச்சிட்டு வந்து பாதா ரெண்டு மணி தா அப்படியே ஷாக் ஆயிட்ட சேரி உடு சிநிஎர்ச பகசிக்கிட்டா முகாமிள்ள இருக்க முடியாதுன்னு சொல்லிடு படுத்தா தூக்கமே வரலை அப்படியே முளிசிக்குட்டு அஞ்சு மணிக்வரைகும் இருந்த. எல்லாரையும் சரியா அஞ்சு மணிக்கு குளிர்ல ஒடவிட்டங்க சும்மா ஒரு ரௌண்டு ரெண்டு ரௌண்டு இல்லை மூணு கிலோமீட்டர் ஒடவிட்டாங்க. சேரி ஒடவிட்டாங்க சாப்பாடாச்சு ருசியா போடுவாங்கனு நம்பி தட்ட எடுத்துட்டு போனே. போனா இதாதண்டி ரெண்டு இட்லி மண்டைல போட்டா மண்டையே ஒடஞ்சிடு. ஒகே அதையு சாப்ட. சாப்டு முடிஞ்சது ஊடனே சீருடையை போடுகுட்டு வரசொன்னாக எல்லாரு போனோம். என்னனமோ சொன்னாக சொல்லி முடிச்சது ஒவ்வொரு பள்ளிளையயும் தனித்தனியா கூடிகுட்டு போனாங்க அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாட்னாங்க. நடுவில் ஒரு சின்ன இடைவேளை எதுக்கா தண்ணி குடிக்குரதுகு மற்றும் லெமன் சாறு மற்றும் சுண்டல் தருவாங்க. அதை சாப்டது திரிம்பியு கூப்டாங்க போனோ இன்னொரு தடவ வாட்னாக,ஒரு வழியா யார் செஞ்ச புண்ணியமோ மதிய உணவு சாப்பிட தட்ட எடுத்துட்டு வரசொன்னாக,நாங்கலு சாப்பிட தட்ட எடுத்துட்டு வந்தா எங்களுக்கு முன்னாடியே நிறையப்பேர் தட்ட வெசிக்குட்டு லைனா நின்னுகிட்டு இருக்காங்க. அப்பரோ என்னடா பண்றதுன்னு நானு லைன்ல நின்ன சாப்பாடு தட்ல போட்டாச்சி ஒகே சாப்பாடு நல்லா இருக்கும்முனு வாயில் வெச்சா பரவாயில்ல ஓகே நல்லதா இருந்துச்சு. லஞ்ச் முடிந்துடுத்து மவராசங்க ரெண்டுமன்நேரம் இடைவேளை உட்டாங்க.மாலை அஞ்சு மணி எங்களோட சீருடையை கலட்டி வெச்சுக்குட்டு கலர் டிரஸ் போடுகுட்டு விளையாட போனோம் அங்க பார்த்தா எங்க அப்பா,அம்மா கேட்டுக்கு வெளியில் நின்னுகுட்டு இருக்காங்க எங்களுக்கு சந்தோசம் தாங்க முடியில,அதுவு கையில பார்த்தா புரோட்டா +குருமா+தின்பண்டம் ஹப்பா எங்க நண்பர்கள் உடனே ஓடிபோய் வாங்கி ஒரு கட்டு கட்டுனோ. அப்புரோ டீ குடுத்தாங்க அது டீ இல்லை வெந்நீர் அந்த மாதிரி ருசி. இந்த மாதிரி டீ என்னோட வாழ்கையில சாப்டதே கிடையாது. டீ முடிஞ்சிருச்சு அதுக்கு அடுத்தது எல்லோரு ஒரு இடத்தில் நிக்கவெச்சு கணக்கேடுப்பாங்க அதாவது ஒவ்வொரு பள்ளிக்கு ஒரு சீனியர் அவங்க வந்து தங்களோட சீனியர்கிட்ட மொத்தோ எத்தனை பேர் என்று சொல்லுவாங்க அந்த சீனியர் தங்களோட மேல்லதிகாரிங்ககிட்ட ரிப்போர்ட் கூடுப்பாங்க. இது முடிஞ்சதும் ஹப்பா டின்னெர் இது அதுக்கு மேல கொடுமை,அதையு சாப்பிட்டு போய் தங்களோட அறைக்கு போய் தூங்கனு அங்க போனா நம்ப பச்சங்க பண்ற தொல்ல தாங்க முடியாது இதையு தாண்டி போய் தூங்குனு அவ்வளவுதா உலகமே மறந்து போயிரு.இது ஒரு நாளுக்கான கதி. ஆனா இந்த மாதிரி அனுபவம் என்னோட வாழ்கையில பாத்ததே இல்லை. அந்த முகாமில் நான் என் தன்னம்பிக்கையை உயர்த்திக்கிட்ட. நிஜமாகவே என்.சி.சி என் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்ப்படுத்தியது. NCC IS GREAT.

0 சின்னப்பையனை திட்டியவர்கள்