நான் என்.சி.சி. பரேட் கமாண்டர் ஆனதுக்கு அப்பறம் எங்க பள்ளிக்கும் ஆர்.எஸ்.கே. என்ற பள்ளிக்கும் செம்ம போட்டி. எதுல போட்டினா எங்களுக்கு வருடா வருடம் எங்க யூனிட் உள்ளாரேயே ஒரு முகாம் நடத்தி நிறைய போட்டி நடத்தி கோப்பை,பரிசு எல்லாமே தருவாங்க அதுல முக்கியமானது டிரில் செய்யறது. முகாமுக்கான நாளும் கிட்ட நெருங்கிடுச்சு நாங்களும் எங்க படையை நல்லா தயாரா வெச்சிருந்தோம். முகாமுக்கு போற நாளும் வந்துடிச்சி,அப்படியே டிரஸ்,வாலி எடுத்துட்டு முகாமுக்கு போனோம். ஆனா அந்த முகாமுக்கு இந்த சின்னப்பையன் போவல ஏன் என்றால் எங்க அம்மா என்ன போகவிடல. என்னோட நண்பர்கள் மட்டும்தான் போனாங்க. அங்க போய் முதல் நாளே எங்க இடத்த தக்க வெசிக்கிட்டோம்,நல்ல பெயரு எடுத்தோம். அடுத்த நாள் எல்லா பள்ளியு தனித்தனியா டிரில் செய்ய வெப்பாங்க அதிலும் நாங்க நல்லா செஞ்சு எங்க பெயரை காப்பாதிட்டோம். இந்த முகாமில ஒரு பய்யன் என்.சி.சியை விட்டு விளகிட்டா அவன் ஏதோ குறும்புத்தனம் பண்ணதுக்காக லீடெர் அவனுக்கு பணிஷ்மன்ட் கொடுக்க அது தாங்க முடியாம நான் என்.சி.சியை விட்டு விளகிக்றேன் சொல்லி போய்டான் ஆனா அவன் செம்மையா டிரில் செய்வான். அப்பரோ பாட்டு,டான்ஸ்,விளையாட்டு என்று எல்லாதைளியு ஜெயிச்சோம். துப்பாக்கி சுடுதல்ல நாங்க தான் முதல் இடம்,கடைசீ நாள் டிரில் போட்டி அதுக்காக நாங்க கஷ்டப்பட்டது எங்களுக்கு மட்டும்தான் தெரியும்,டிரில் போட்டிக்கு எங்கள கூப்டாங்க லீடெர் கம்மான்ட் கொடுக்க அப்படியே அந்த வெறியோட நடந்து போனோம் நாங்க நெனச்ச மாதிரி அதுளையு முதல்ல வந்து ஆல் ஓவர் சாம்பியன் பட்டத்தை வாங்கி எங்க ஆசிரியரை பெருமை படுத்தினோம். நான் சொன்ன ஆர்.எஸ்.கே பள்ளி இரெண்டாம் இடம் பிடிச்சிடுச்சி அவங்க சுமார் ஏழு,எட்டு வருஷமா முதல்லையே வந்தாங்க அதை நாங்க முறியடிச்சி சாதனை படச்சோம். இந்த வெற்றி முழுசு எங்க கம்மண்டேர் ஏ.பிரேம்குமார் எங்க ஆசிரியருக்கு போய் சேரும். ஆனால் இந்த முகாமுக்கு நான் போகல ஏன்னா எனக்கு ஒரு பாடத்துல புட்டுகிடுச்சு,இத பாத்த எங்க அம்மா நீ என்.சி.சில போய்தா
நீ பைல் மார்க் வாங்குன சொல்லி என்ன போக விடல. அதுக்கு பதுலா என்னோட நண்பன் அவன்தான் எங்களோட லீடெர், இந்த மெடெல் வாங்குனதுக்கு அவனு ஒரு காரணம். ஓகே,இதுக்கு மேல இந்த சின்னப்பையனுக்கு எழுத தெரியாது அதனால இதோட இதை முடிச்சிக்கலாம்.

0 சின்னப்பையனை திட்டியவர்கள்